05.09.2023 அன்று நமது பள்ளியில் ஆசிரியர் தினம். வ.உ. சிதம்பரனார் பிறந்த தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. (I- V) வகுப்பு மாணவர்கள் கண்ணன் மற்றும் ராதை வேடம் அணிந்து கலந்து கொண்டனர். (VI- VIII) வகுப்பு மாணவர்களின் நடனம் விழாவில் இடம் பெற்றது. மாணவர்கள் ஆசிரியர்கள் போன்று பாடம் நடத்திக் காண்பித்தனர்.
நமது பள்ளி செயலர் சுவாமி ஹரிவ்ரதானந்த மகராஜ் ஸ்ரீகிருஷ்ணர் பற்றி பஜனையும் சொற்பொழிவும் செய்தார். மேலும் திரு. முரளீதரன், தலைமை ஆசிரியர் அவர்கள் டாக்டர் ராதா கிருஷ்ணன் மற்றும் வ.உ சிதம்பரனார் பற்றி கூறினார்.
கிருஷ்ணர் மற்றும் வேடம் அணிந்த குழந்தைகளுக்கிடையே Lucky corner விளையாட்டு நடைபெற்றது. விளையாட்டில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியைகளுக்குமிடையே இவ்விளையாட்டு நடைபெற்றது. விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி செயலர் சுவாமிஜி பரிசுகள் வழங்கினார். பிற்பகல் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கான எறிபந்து போட்டி நடைபெற்றது.