12.06.2024 புதன் அன்று நமது பள்ளியில் 1ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு வித்யாரம்ப நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் நமது வித்யாலய உதவிச் செயலர் சுவாமி தத்பாஸானந்த மகராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் சுவாமி தத்பாஸானந்த மகராஜ் மற்றும் நமது பள்ளிச் செயலர் சுவாமி ஹரிவ்ரதானந்த மகராஜ் ஆகியோர் அகரம் மற்றும் ஓம்காரம் எழுதி வித்யாரம்பம் செய்து வைத்தனர். மேலும் குழந்தைகள் தங்களது பெற்றோர்களுக்குப் பாத பூஜை செய்து ஆசி பெற்றனர். பெற்றோர்கள் அட்சதை தூவி குழந்தைகளை ஆசீர்வதித்தனர். குழந்தைகளுக்கு சுவாமி தத்பாஸானந்த மகராஜ் அவர்கள் நோட்டுகள், பென்சில், இரப்பர் பரிசளித்து ஆசீர்வதித்தார்.
